Bione
திருக்கோணேஸ்வரர் நடனாலயம் – சுவிஸ்

திருக்கோணேஸ்வரர் நடனாலயம்

About

திருக்கோணேஸ்வரர் நடனாலயம் – சுவிஸ்

திருகோணமலை ஒரு நீண்ட தமிழர்களின் பண்டைய வரலாற்றைக் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர அரசுகள் மற்றும் போர்த்துகீசு, டச்சு மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ சக்திகள் போன்ற பல்வேறு பேரரசுகள் நகரத்தை ஆண்டுள்ளன. இந்தியப் பெருங்கடலைத் தாண்டிய மலை உச்சியிலும், இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றானதாகவும் கோணேஸ்வர, மாதுமை சமேதராய் திருக்கோணேஸ்வரம் கோவில் அமைந்துள்ளது. தான் கற்ற பரதக் கலையில் புதியன புகுத்தி தனக்கென்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் 1988 ம் ஆண்டு திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தை திருமதி மதிவதனி சுதாகரன் அவர்கள் ஆரம்பித்தார்.

உலகின் மூத்த குடி எனக் கருதப்படும் தமிழ்க் குடி தற்போது உலகம் முழுவதிலும் பரவி வாழ்ந்தாலும், நவீன அறிவியல் உலகில் ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமாயின் அதன் பக்க வேர்களில் ஒன்றாக கலைகள் விளங்குவது அவசியம். தமிழ் மொழி ஒரு பக்தி மொழியாக வளர்ந்திருப்பதால் மொழி சார்ந்த கலைகளும் பின்னிப் பிணைந்துள்ளது.

நவீன உலகு சவால்கள் நிறைந்ததாக உள்ளது. தற்போதைய தமிழ்த் தலைமுறையினர் பல் இன, கலாசாரங்களுக்குள் பல சவால்களைக் எதிர்கொள்கின்றனர். சவால்களை சிறப்பாக எதிர்கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதர்களாகவும் இனமாகவும் விளங்க முடியும்.

இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ள தாய்த் தமிழ்மொழி அறிவும், கலைகளும் பண்பாடும் இன்றைய தலைமுறைக்கு அவசியம். 1992 ம் ஆண்டு காலப் பகுதியில் சுவிஸ்லாந்திற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் மொழி, கலைகள் வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்ற உயரிய சிந்தனையும் செயல்பாடுமே 1992ம் ஆண்டு Zurich மாநிலத்தில் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்கள் திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தினை ஆரம்பித்தார். இவ் நடனப்பள்ளி சுவிஸ்லாந்தில் தமிழ்க் கலையுலகில் தனக்கானதொரு தனித்துவத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இவ் நடனப்பள்ளி மாணவர்கள் கலையுலகில் தங்களை நிலைநாட்டியது மட்டுமல்லாமல் பிற மொழிக்கல்வி, அறிவியல், விஞ்ஞானம், அரச கரும அலுவலகம், நிறுவனங்கள், வங்கிகள், வைத்தியத்துறை, சட்டத்துறை என பல்வேறு இடங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு பல பொறுப்பு வாய்ந்த துறை முன்நிலை அதிகாரிகளாகவும் மிளிர்கின்றனர். தாய்மொழிக்கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையானதாகும்.