Bione
திருக்கோணேஸ்வரர் நடனாலயம் – சுவிஸ்

கலைவித்தகர்

About

கலைவித்தகர்

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பிள்ளைகளை தமிழ் மொழி மற்றும் அழகியற்கலையை ஊக்குவித்து கலைத் திறமைகளை வளர்ப்பதன் மூலம் உணர்வுப்பூர்வமான பண்பாடுமிக்க எதிர்கால தமிழின சந்ததியை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு சுவிஸ்லாந்து தமிழ்க் கல்விச் சேவையினர் பேராசிரியர் திரு.கார்த்திகேசு சிவத்தம்பி தலைமையில் 2000 ம் ஆண்டு அனைத்துலக நுண்கலை ஆசிரியர்கள் செயலமர்வு மூன்று நாட்கள் நடைபெற்று அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் நுண்கலைகளின் படிநிலைகள் ஐரோப்பிய கல்வித்தரத்திற்கு நிகரான பாடத்திட்டத்துடன் தரம் 1 தொடக்கம் 7 வரையான எழுத்துப் பரீட்சையும் செய்முறைப் பரீட்சையும் நடைபெற்று வருகின்றது. தரம் 7 ஆசிரியர் தரத்திற்கான பரீட்சையாகவும் எழுத்து தேர்வு மற்றும் ஆற்றுகையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டயம் “கலைவித்தகர்” ஆகும்.