Bione
திருக்கோணேஸ்வரர் நடனாலயம் – சுவிஸ்

கலாவித்தகர்

About

கலாவித்தகர்

வட இலங்கை சங்கீத சபை. தமிழர்களின் கலைகளினூடாக ஆரோக்கியமான, ஆளுமைமிக்க நற்பண்புகள் கொண்ட சமூகத்தை உருவாக்குதலை நோக்கமாக கொண்டும். தேசிய கல்விக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து சபையின் வரைமுறைக்கு உட்பட்டு, கலைகளினூடாக கலைகளைப் பேணிப் பாதுகாப்பதுடன், எதிர்காலச் சந்ததியினர்க்கு முன்மாதிரியாகத் திகழக்கூடிய சிறந்த கலைஞர்களை சமூகத்திற்கு வழங்குதலும்“கலையே இன்ப வாழ்வு” என்ற மகுட வாசகத்துடன் யாழ்ப்பாணத்தின் கலைக் கோவிலாக வட இலங்கை சங்கீத சபை இயங்கி வருகின்றது.

இலங்கையில் இசைத்துறையை வளர்க்கும் நோக்கமாக இசைத்துறையில் ஆர்வம் கொண்ட திரு மு. சிவசிதம்பரம் ( M.S பரம் ) அவர்களால் பல அறிஞர்களின் ஆலோசனையை பெற்று 08.08.1931 ஆம் ஆண்டு வட இலங்கைச் சங்கீத சபை ஆரம்பிக்கப்பட்டது.

அகில இலங்கை ரீதியாகஇந்தப் பரீட்சையில் சங்கீதம், நடனம், நாடகம், மிருதங்கம், பரதம், வயலின், வீணை ஆகியவற்றுக்கான எழுத்துப் பரீட்சையும், செய்முறைப் பரீட்சையும் முறையே தரம் 1,2,3,4,5,6 என்ற கல்வித் தரத்தின் அடிப்படையில் நடைபெறும். 6 வது தரத்தில் முழுமைப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களுக்கமைவாக நடைபெறும் பரீட்சையில் சித்தியடைந்து, ஆற்றுகையையும் சபையோர், நடுவர்கள் முன்னிலையில் அரங்கேற்றி சித்தி பெற்றவர்களுக்கு வழங்கப்டும் பட்டயம்”கலாவித்தகர்” ஆகும்.

அகில இலங்கை கடந்து ஐரோப்பிய கண்டத்தில் இவ் பரீட்சைக்கானஇணைப்பாளராகவும், பரீட்சைகளுக்கான பொறுப்பாளராகவும் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்கள் 2011ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2011 ம் ஆண்டு தொடக்கம் சுவிஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற பரீட்சையில் 6வது தரத்தில் சித்தியடைந்த 40 மாணவர்களுக்கான கலாவித்தகர் பட்டயம் வழங்கும் நிகழ்வு 2016ம் ஆண்டு Zurich மாநிலத்தில் நடைபெற்றது.