பண்டைய தமிழ் மன்னர் காலத்திலும், அக்காலப் புலவர்கள் தாம் புதிதாய் இயற்றிய புராணம், சிற்றிலக்கியம் போன்றவற்றை கோயில்களிலும், மண்டபங்களிலிலும் அரங்கேற்றினர்.
சிலப்பதிகாரக் காவியத்தில் மாதவியின் அரங்கேற்றம் பற்றி மாதவி வலக் கால் எடுத்து வைத்து மேடை ஏறி வலப் பக்கம் சார்ந்து நின்றாள். துதிபாடும் தோரிய மகளிர், இசையாளர் இடப் பக்கம் இருந்தனர் நிகழ்வுகள் தொடங்கின கலைத் திறனைஅவையோர் அறியச்செய்தாள் என இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.
நடனமணி முதன்முதலில் முழுநேர நாட்டிய நிகழ்வுக்கு தேவையான உருப்படிகளை முறையாக தெளிவுபடக் கற்றுக்கொண்டு அலாரிப்பு முதல் தில்லானா வரை அரங்கம் என்கின்ற மேடைஏறி நடனமாடுதலும்,
குருவினால் அவையோருக்கு புதிய நடனக் கலைஞரை அறிமுகமாக்கும் விழாவே அரங்கேற்றம் .
புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் வேற்று மொழிகளுக்குள்ளும், கலாசாரங்களுக்கும் சிக்குண்டபோதும் தமிழர்களின் அடையாளங்களும், மரபுவழி நிகழ்வுகளும் பரதநாட்டிய வடிவில் காப்பாற்ற பட்டுவருகின்றது. சுவிஸ்லாந்து நாட்டில் அதிகளவிலான நடன மணிகளை உருவாக்கி அரங்கேற்றிய பெருமை முனைவர் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களையே சாரும்.