உலகின் மூத்த குடி எனக் கருதப்படும் தமிழ்க் குடி தற்போது உலகம் முழுவதிலும் பரவி வாழ்ந்தாலும், நவீன அறிவியல் உலகில் ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமாயின் அதன் பக்க வேர்களில் ஒன்றாக கலைகள் விளங்குவது அவசியம். தமிழ் மொழி ஒரு பக்தி மொழியாக வளர்ந்திருப்பதால் மொழி சார்ந்த கலைகளும் பின்னிப் பிணைந்துள்ளது.
நவீன உலகு சவால்கள் நிறைந்ததாக உள்ளது. தற்போதைய தமிழ்த் தலைமுறையினர் பல் இன, கலாசாரங்களுக்குள் பல சவால்களைக் எதிர்கொள்கின்றனர். சவால்களை சிறப்பாக எதிர்கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதர்களாகவும் இனமாகவும் விளங்க முடியும்…
30 வருடங்களுக்கு மேலாக ஐரோப்பாவில், தமிழர்களின் பரதக்கலையின் வளர்ச்சிக்கு வித்திட்டவரும், சுவிஸ்லாந்தில் திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தின் ஸ்தாபகரும், திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தின் (Zurich) இயக்குனராகவும், சுவிஸ்லாந்தின் முது நிலை நடன ஆசிரியராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகின்றார்
இலங்கைத் தீவின் மூன்று மலைகள் சூழ்ந்த திரிகோணம் என பெயர் பெற்ற இயற்கை எழில் மிக்க கடல் சூழ்ந்த துறைமுகமும், உயர்ந்த குன்றத்தின் உச்சியில் கோணேஸ்வர பெருமானும் மாதுமை அம்பாள்சமேத, பாபநாசம் தீர்த்தச் சிறப்பும்…
பண்டைய தமிழ் மன்னர் காலத்திலும், அக்காலப் புலவர்கள் தாம் புதிதாய் இயற்றிய புராணம், சிற்றிலக்கியம் போன்றவற்றை கோயில்களிலும், மண்டபங்களிலிலும் அரங்கேற்றினர்.
சிலப்பதிகாரக் காவியத்தில் மாதவியின் அரங்கேற்றம் பற்றி மாதவி வலக் கால் எடுத்து வைத்து மேடை ஏறி வலப் பக்கம் சார்ந்து நின்றாள். துதிபாடும் தோரிய மகளிர், இசையாளர் இடப் பக்கம் இருந்தனர் நிகழ்வுகள் தொடங்கின கலைத் திறனைஅவையோர் அறியச்செய்தாள் என இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை ரீதியாகஇந்தப் பரீட்சையில் சங்கீதம், நடனம், நாடகம், மிருதங்கம், பரதம், வயலின், வீணை ஆகியவற்றுக்கான எழுத்துப் பரீட்சையும், செய்முறைப் பரீட்சையும் முறையே தரம் 1,2,3,4,5,6 என்ற கல்வித் தரத்தின் அடிப்படையில் நடைபெறும். 6 வது தரத்தில் முழுமைப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களுக்கமைவாக நடைபெறும் பரீட்சையில் சித்தியடைந்து, ஆற்றுகையையும் சபையோர், நடுவர்கள் முன்னிலையில் அரங்கேற்றி சித்தி பெற்றவர்களுக்கு வழங்கப்டும் பட்டயம்”கலாவித்தகர்” ஆகும்.
அகில இலங்கை கடந்து ஐரோப்பிய கண்டத்தில் இவ் பரீட்சைக்கான இணைப்பாளராகவும், பரீட்சைகளுக்கான பொறுப்பாளராகவும் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்கள்…
புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பிள்ளைகளை தமிழ் மொழி மற்றும் அழகியற்கலையை ஊக்குவித்து கலைத் திறமைகளை வளர்ப்பதன் மூலம் உணர்வுப்பூர்வமான பண்பாடுமிக்க எதிர்கால தமிழின சந்ததியை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு சுவிஸ்லாந்து தமிழ்க் கல்விச் சேவையினர் பேராசிரியர் திரு.கார்த்திகேசு சிவத்தம்பி தலைமையில் 2000 ம் ஆண்டு அனைத்துலக நுண்கலை ஆசிரியர்கள் செயலமர்வு மூன்று நாட்கள் நடைபெற்று அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் நுண்கலைகளின் படிநிலைகள் ஐரோப்பிய கல்வித்தரத்திற்கு நிகரான பாடத்திட்டத்துடன் தரம் 1 தொடக்கம் 7 வரையான எழுத்துப் பரீட்சையும் செய்முறைப்…
மனித வரலாற்றிலே கலைகள் ஒரு முக்கியமான இடத்தினை வகித்து வந்துள்ளன. கலையறிவு மக்களுக்கு மனித பண்பினை வளர்க்க உதவுவன. தமிழர்களின் இலக்கியங்களில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் “ஆயகலைகளை அறுபத்து நான்கு” என கூறியுள்ளார். இக் கலைகளுள் இசையும், நடனமும் குறிப்பிடற்பாலன.
தமிழர்களுக்குரிய சாஸ்திரீய நடனமாகிய பரதநாட்டியம் நீண்டகால வரலாறு கொண்டது. அதனுடைய அமைப்பும் பெயர்களும் காலம்தோறும் மாற்றமடைந்துவந்துள்ளன. சங்க காலத்தில் கூத்து ஆடல் போன்ற சொற்களாலும், ஆடுமிடம் ஆடுகளம் எனவும் அழைக்கப்பட்டது. சிலப்பதிகாரம் குறிப்பாக அதிலுள்ள அரங்கேற்றுகாதையிலே சித்தரிக்கப்படும்மாதவி ஆடிய ஆடல்கள்…
மனிதனின் வாழ்வில்! இயங்கும் உடலில் நிகழும் அபிநய உடலசைவு மொழியை உலகெங்கும் உள்ள எல்லா நாட்டினரும் போற்றி வளர்க்கின்றனர். ஒவ்வொரு இனத்தவரும் நாட்டியக்கலையில் அளவற்ற உற்சாகங்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் நாட்டுப்புறக்கலைகளையும், நிகழ்வகளையும் மக்கள் மனதார ஏற்றுக் கொண்ட நிலையில் விலங்குகளினதும், பறவைகளினதும் அசைவுகளையும் , நடைகளையும் பார்த்த மனிதன் தானும் அதே போல் அசைந்தாட நினைத்தான். அவ்வாறே மயில் தோகையை விரித்து அழகாக அசைந்து வருவதைப் பார்த்த தமிழர்கள், தங்கள் கலைவடிவில் மயிலாடலை புகுத்தினார்கள்.